திருவள்ளூர், மே 14: திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை அருகே, தண்ணீர் குளம் பகுதியில் திருநின்றவூர் முதல் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா வரை 6 வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் இருந்து தண்ணீர் குளம் வழியை கிளாம்பாக்கம், தொட்டிகலை, ஆயலூர் என சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அவ்வழியே பள்ளி கல்லூரி மற்றும் தனியார் தொழிற்சாலை வாகனங்கள் சென்று வரும் நிலையில் 6 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருவதால் தற்போதுள்ள பாதையை அடைத்து மாற்று வழியாக அரை கிமீ தொலைவில் மேம்பாலத்தின் கீழ் பாதை அமைத்து தருவதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து ஏற்கனவே உயர் கலெக்டர், நெடுஞ்சாலை துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் பணிகள் தீவிரமாக நடைபெறுவதால், தங்களுக்கு தற்போது பயன்படுத்தும் வழியிலேயே சுரங்கப் பாதை அமைத்து தர வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் சாலைப் பணிகளுக்காக மண் எடுத்துச் செல்லும் லாரிகளை சிறைபிடித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாப்பேட்டை போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
The post லாரிகளை சிறை பிடித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்: சுரங்கப்பாதை அமைத்து தர கோரிக்கை appeared first on Dinakaran.