தஞ்சாவூர்: லாரியில் ரகசிய அறை அமைத்து, ஆந்திராவில் இருந்து பேராவூரணிக்கு 330 கிலோ கஞ்சாவை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தனிப்படை போலீஸார் நேற்று தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பேராவூரணியில் இருந்து முடச்சிக்காடு பகுதியை நோக்கிச் சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், டீசல் டேங்க் அருகில் ரகசிய அறை அமைத்து, 330 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியை பின்தொடர்ந்து வந்த காரில் இருந்த வர்களை போலீஸார் பிடித்தனர்.