லாரி மோதி பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து

7 months ago 39

ராஞ்சி,

பீகார் மாநிலத்தில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு பயணிகள் ரெயில் ஒன்று நேற்று புறப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலம் டியோகர் அருகே அந்த ரெயில் சென்று கொண்டிருந்தது.

சங்கர்பூர் ரெயில் நிலையம் அருகே ரெயில் சென்றது சாலைக்கு குறுக்கே இருந்த ரெயில்வே கேட் மூடப்பட்டது. அப்போது சரக்கு லாரி ஒன்று வேகமாக வந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி ரெயில்வே கேட்டை உடைத்து தள்ளிவிட்டு ரெயில் மீது வேகமாக மோதியது.

லாரி மோதிய வேகத்தில் பயணிகள் ரெயில் தடம் புரண்டது. இதில் என்ஜின் பெட்டி உள்பட 4 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகின.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு ரெயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article