லாட்டரி அதிபர் மார்ட்டீன் தொடர்புடைய இடங்களில் ரூ.12½ கோடி பணம் பறிமுதல்

5 days ago 4

சென்னை,

லாட்டரி அதிபர் மார்ட்டீன் தொடர்புடைய இடங்கள் கடந்த 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைபற்றப்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறை இன்று விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

மார்ட்டின் மற்றும் அவரது நிறுவனமான பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டலுக்கு எதிராக சட்டவிரோத பணிமாற்ற சட்டத்தின் கீழ் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மேகாலயா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள 22 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் வழக்கு தொடர்பான பல்வேறு குற்ற ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் சிக்கியது. கணக்கில் வராத ரூ.12 கோடியே 41 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.6 கோடியே 42 லட்சம் வங்கி பணம் முடக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article