லாக் அப் மரணங்கள்: தவெகவினர் நாளை ஆர்ப்பாட்டம்

3 hours ago 1

சென்னை,

தமிழகத்தில் கடந்த நான்கு வருடத்தில் நடைபெற்ற லாக்கப்பில் உயிர் இழந்தவர்களுக்கு நீதி கேட்கும் வகையில் நாளை தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வைத்து சென்னையில் சிவனந்தா சாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கட்சியின் தலைவர் விஜயின் தலைமையில் நடைபெற உள்ளது.

இதற்காக பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் லாக் ஆப் மரணங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர். நாளை நடைபெற உள்ள போராட்டத்திற்கு போலீசார் தடை விதிக்கப்படலாம் என எண்ணி முன்னதாகவே அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளனர்.

*காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் சென்று உயிரிழந்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த கோகுல் ஸ்ரீ குடும்பத்தினர்

* அயனாவரத்தைச் சார்ந்த விக்னேஷ் குடும்பத்தினர்

* கொடுங்கையூரைச் சார்ந்த அப்பு என்ற ராஜசேகர் குடும்பத்தினர்

*திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த தங்கமணியின் குடும்பத்தினர் வருகை

*புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த சின்னதுரை குடும்பத்தார்

*தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த செந்தில் குடும்பத்தினர்

Read Entire Article