'லப்பர் பந்து' படத்தில் நடிக்க மறுத்த எஸ்.ஜே. சூர்யா…. என்ன காரணம் தெரியுமா?

3 months ago 30

சென்னை,

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'லப்பர் பந்து'. இவர் கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதியவர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் செப்டம்பர் 20-ம் தேதி வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியாகியுள்ள 'லப்பர் பந்து' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. லப்பர் பந்து படத்தை பாராட்டி கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஹர்பஜன் சிங் ஆகியோர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி படக்குழுவை பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் எஸ் ஜே சூர்யா லப்பர் பந்து திரைப்படத்தில் நடிக்க மறுத்தது குறித்த புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அட்டகத்தி தினேஷ் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது எஸ்.ஜே. சூர்யா.

அதாவது 5.75 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தான் 'லப்பர் பந்து' திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஆனால் எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் நடிக்க 7 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டாராம். அத்துடன் "நான் இப்பொழுதுதான் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறேன். எனவே இந்த படத்தில் வயதான தோற்றத்தில் ஹீரோயினுக்கு அப்பாவாக என்னால் நடிக்க முடியாது" என லப்பர் பந்து படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம் எஸ்.ஜே. சூர்யா. ஆனால் எஸ்.ஜே. சூர்யா நடிக்கு மறுத்த அட்டகத்தி தினேஷின் கதாபாத்திரம் தான் தற்போது பெரிய அளவில் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article