"லப்பர் பந்து" படத்தின் 'நீ பொட்டு வச்ச' வீடியோ பாடல் வெளியானது

3 months ago 23

சென்னை,

கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'லப்பர் பந்து'. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடித்துள்ளனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். கடந்த மாதம் 27-ந் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்துள்ளன. கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்ப படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் 'நீ பொட்டு வச்ச' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் அட்டக்கத்தி தினேஷுக்கு பில்டப் பாடலாக ஒலிக்கிறது.

'லப்பர் பந்து' படத்தில் கெத்து கதாபாத்திரத்தில் அட்டக்கத்தி தினேஷ், தீவிர விஜயகாந்த் ரசிகராக நடித்திருக்கிறார். அவருக்கான பில்டப் பாடலாக நடிகர் விஜயகாந்த் நடித்த பொன்மனச்செல்வன் படத்தின் 'நீ பொட்டு வச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்' என்ற பாடல் ஒலிக்கச் செய்யப்படுகிறது. இந்தப் பாடல் ஒலிக்கும்போது ரசிகர்களின் ஆரவாரத்தால் திரையரங்கமே அதிர்கிறது.

'லப்பர் பந்து' படக்குழு சமீபத்தில் விஜயகாந்தின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

The song playing on everybody's mind right now ❤️'Nee Pottu Vechcha' - #LubberPandhu version video out here - https://t.co/iP4diCo08QBlockbuster run in theatres!Produced by @lakku76 andCo-produced by @venkatavmedia. @Prince_Pictures @iamharishkalyan #GethuDineshpic.twitter.com/IarJtzVxyR

— Prince Pictures (@Prince_Pictures) October 5, 2024
Read Entire Article