லக்னோவுக்கு எதிரான ஆட்டம்... சாம்சன் விளையாடுவது சந்தேகம் - காரணம் என்ன..?

11 hours ago 1

ஜெய்ப்பூர்,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 34 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

ஜெய்ப்பூரில் இன்று இரவு நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், லக்னோவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சாம்சன் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது.

டெல்லிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் பேட்டிங் செய்த போது சாம்சனுக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் 'ரிட்டயர்டு அவுட்' மூலம் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். காயத்தின் தன்மை குறித்து இன்னும் முழுமையாக தெரியவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக லக்னோவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது. ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் சாம்சன் விளையாடாத பட்சத்தில் ரியான் பராக் அணியை வழிநடத்துவார் என தெரிகிறது. 

Read Entire Article