
vainஜெய்ப்பூர்,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 36-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி ராஜஸ்தான் முதலில் பந்துவீச உள்ளது.
இந்த ஆட்டத்திற்கான ராஜஸ்தான் அணியில் வழக்கமான கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ரியான் பராக் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
அத்துடன் சாம்சனுக்கு பதிலாக 14-வயது ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும் இவர் இம்பேக்ட் வீரர் வரிசையில் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் களமிறங்கும் வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுபம் துபே, ரியான் பராக் (கேப்டன்), நிதிஷ் ராணா, துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), டேவிட் மில்லர், அப்துல் சமத், ரவி பிஷ்னோய், ஷர்துல் தாக்கூர், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் சிங் ரதி, அவேஷ் கான்