![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/24/35522231-accident.webp)
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள இந்திரா கால்வாய் அருகே சென்று கொண்டிருந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. இதன் தொடர்ச்சியாக பின்னால் வந்த வேன் ஒன்று சொகுசு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த மூன்று பேர் மற்றும் சொகுசு காரில் இருந்த ஒருவர் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர். இறந்தவர்கள் ஷாஜத் (40), கிரண் யாதவ் (38), குந்தன் (20) மற்றும் ஹிமான்ஷு (17) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.