ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் "பறந்து போ" படத்திற்கு கிடைத்த வரவேற்பு வீடியோ வெளியீடு

5 hours ago 1

சென்னை,

எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர் இயக்குனர் ராம் . "கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி" உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.

பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த 'ரோட் டிராமா'வாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது.

'பறந்து போ' திரைப்படம் ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் கடந்த பிப்ரவரியில் திரையிடப்பட்டது. அப்போது பார்வையாளர்களின் ரியாக்ஷன் மற்றும் அவர்களது விமர்சனத்தை வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் திரைப்படம் மிகவும் நகைச்சுவையாக இருந்தது, நடிப்பு அருமையாக இருந்தது, அந்த சிறுவனின் நடிப்பு ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. என கூறியுள்ளனர்.

#ParanthuPo at the #IFFR - Audience Response..⭐ Film releasing on July 4th in Theatres..pic.twitter.com/IJWJuL4fGB

— Laxmi Kanth (@iammoviebuff007) June 28, 2025
Read Entire Article