ரோகித், ரூட்,சுமித் இல்லை..கடந்த 15 ஆண்டுகளில் நாம் பார்த்த சிறந்த ஆல் பார்மட் வீரர் அவர்தான் - வில்லியம்சன்

5 hours ago 2

வெலிங்டன்,

நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் சுமித், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் பேட்டிங்கில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதனால் அவர்களை பேப் 4 பேட்ஸ்மேன்கள் என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டுவது வழக்கமாகும்.

இதில் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் சுமித் ஆகியோரை விட அபாரமாக விளையாடிய அவர் பேப் 4 பேட்ஸ்மேன்களில் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்து முன்னிலையில் இருந்தார். ஆனால் சமீப கால தடுமாற்றத்தால் பின்னடைவை சந்தித்தார். இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் பேப் 4 பேட்ஸ்மேன்களில் அவர் தொட முடியாத இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் விராட் கோலி கடந்த 15 வருடங்களாக உலகின் சிறந்த ஆல் பார்மட் பேட்ஸ்மேனாக செயல்பட்டதாக கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார். அத்துடன் கிரிக்கெட்டை தாண்டி விராட் கோலியுடன் தமக்கு நட்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், "கடந்த 15 ஆண்டுகளில் நாம் பார்த்த சிறந்த ஆல் பார்மட் வீரர் விராட் கோலியாக இருக்கலாம். கிரிக்கெட் வெறி கொண்ட நாட்டில் அவருக்கு சில சவால்கள் இருந்தன. இருப்பினும் அவர் புகழின் உச்சியில் இருந்தார். நாங்கள் பல்வேறு வழிகளில் தொடர்பில் இருக்கிறோம். ஆனால் அது கிரிக்கெட்டை பற்றியது கிடையாது. எதிரெதிர் அணிகளில் இருக்கும்போது மட்டுமே நீங்கள் போட்டியிட விரும்புவீர்கள்" என்று கூறினார். 

Read Entire Article