ரோகித் சர்மா மீண்டும் துவக்க வீரராக ஆட வேண்டும்: ரவிசாஸ்திரி ஆலோசனை

2 months ago 10

அடிலெய்ட்: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 5 டெஸ்ட் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபில் அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. எந்தவித சவாலும் கொடுக்காமல் இந்தியா தோல்வியை சந்தித்ததால் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுபற்றி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது: “ரோகித் சர்மா இந்த தொடரில் இன்னும் மீண்டு வர முடியும் என்று அவர் நம்ப வேண்டும். இந்த 10 வருடத்தில் நீங்கள் ஒரு போட்டியை தோற்றால் ஒரு போட்டியை வெல்கிறீர்கள்.

அதனால் நீங்கள் நம்பிக்கையாக இருக்க வேண்டும். ரோகித் சர்மா தன்னை துவக்க வீரராக வைத்துக் கொள்ள வேண்டும். அங்குதான் அவர் தன்னை அச்சமற்றவராக வெளிப்படுத்திக் கொள்ளக் கூடியவராக இருக்க முடியும். அவரது உடல் மொழியை பார்க்கும் பொழுது கொஞ்சம் அடங்கிவிட்டார் என்று நினைத்தேன். மேலும் களத்தில் ரோகித் சர்மா பெரிய அளவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. ரோகித் சர்மா இதிலும் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.

The post ரோகித் சர்மா மீண்டும் துவக்க வீரராக ஆட வேண்டும்: ரவிசாஸ்திரி ஆலோசனை appeared first on Dinakaran.

Read Entire Article