ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - வானதி

3 months ago 21
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக நியாயவிலைக்கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என பா.ஜ.க எம்.எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். குறைந்த அளவே பருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க முடியாது எனக் கூறப்படுவதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ரேஷன் கடையில் 30 ரூபாய்க்கு வழங்கப்படும் ஒரு கிலோ துவரம் பருப்பு வெளிச்சந்தையில் 200 ரூபாய் வரை விற்கப்படுவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இதனால் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
Read Entire Article