சென்னை: 2025-ம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதை ரேவதி மற்றும் பொன்னி ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அவர்களை சமூகத்தின் முக்கிய பங்களிப்பாளர்களாக அங்கீகரித்து சிறப்பிக்கும் விதமாக 2021-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ‘சிறந்த திருநங்கை’ விருது வழங்கப்பட்டு வருகிறது.