ரேசன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளருக்கு நேர்முகத் தேர்வு

2 months ago 10

ராமநாதபுரம், நவ.18: கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 31 விற்பனையாளர் மற்றும் 13 கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது.

இதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 25.11.2024 முதல் 6.12.2024 வரை பழைய யுனைடெட் ஸ்கூல் பில்டிங், அமெரிக்கன் இண்டர்நேசனல் ப்ளே ஸ்கூல் பின்புறம் பழைய செக்போஸ்ட், பட்டிணம்காத்தான். ராமநாதபுரத்தில் நடைபெற உள்ளது.

எனவே நேர்முகத் தேர்விற்கான அனுமதிச் சீட்டு 18.11.2024 முதல் ராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தின் வழி https://www.drbramnad.net பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும். இதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையக் குழுவின் பிரத்யேக தொலைபேசி எண் 04567 230950 மற்றும் [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ராமநாதபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜினு தெரிவித்துள்ளார்.

The post ரேசன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளருக்கு நேர்முகத் தேர்வு appeared first on Dinakaran.

Read Entire Article