ரெயில்வே தேர்வு: மாணவர்களின் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

3 hours ago 1

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரெயில்வே தேர்வு எழுத செல்லும் மாணவர்களின் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்படுகின்றன. அதன்படி, எர்ணாகுளம்-கண்ணூர், திருச்சி- திருவனந்தபுரம், திருவனந்தபுரம்-குருவாயூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் (வண்டி எண்-16305, 22627, 16342) இன்று (செவ்வாய்கிழமை) முதல் வருகிற 18-ந் தேதி வரை கூடுதலாக ஒரு 2-ம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்படுகிறது.

அதே போல, கண்ணூர்-ஆலப்புழா, ஆலப்புழா-கண்ணூர், குருவாயூர்- திருவனந்தபுரம், திருவனந்தபுரம்-திருச்சி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் (16308, 16307, 16341, 22628) இன்று முதல் 19-ந் தேதி வரை கூடுதலாக ஒரு 2-ம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article