'ரெயில் விபத்துகள் வருடத்திற்கு 40 என்ற அளவில் குறைந்துள்ளன' - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்

1 month ago 19

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-

"எந்தவொரு விபத்துக்கும் மூலக்காரணம் என்ன என்பதை கண்டறிய முயற்சிக்கிறோம். அதன் மூலம் கட்டமைப்பு மற்றும் அமைப்பு ரீதியான பிரச்சினைகளை சரிசெய்ய முடியும். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு சராசரியாக 171 ரெயில் விபத்துகள் நடந்தன. இப்போது அது ஆண்டுக்கு 40 ஆக குறைந்துள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் விபத்துகள் கணிசமாக குறைந்து வருகின்றன.

ரெயில் விபத்துகள் 60 முதல் 70 சதவீதம் வரை குறைந்துள்ளன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், ரெயில் தடம் புரண்ட சம்பவங்களின் சராசரி எண்ணிக்கை 400 முதல் 500 ஆக இருந்தது. இப்போது அது 80 ஆக குறைந்துள்ளது. ரெயில்வே ஊழியர்களின் பயிற்சி நடைமுறைகளை மேம்படுத்தி, தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துவதால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Read Entire Article