ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 6.5%ஆக நீடிக்கும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

3 months ago 19

டெல்லி: வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கு விதிக்கும் வட்டியே ரெப்போ என அழைக்கப்படுகிறது. இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கைக் குழு கூடி ரெப்போ விகிதம் பற்றி முடிவெடுக்கும். அந்த வகையில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் ரெப்போ வட்டி விகிதம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கும் . ரெப்போ வட்டி விகிதத்தில் தொடர்ந்து 10-வது முறையாக ரிசர்வ் வங்கி மாற்றம் எதுவும் செய்யவில்லை. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது. பண வீக்க விகிதம் நடப்பு நிதியாண்டில் 4.5% சதவீதத்திற்கு மேல் இருக்கும். பொருளாதார வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

The post ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 6.5%ஆக நீடிக்கும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article