ரூட்டு தல.. வெட்டி பந்தா.. கெத்து காட்ட.. வெத்து ரீல்ஸ்.. மாணவர் கொலை பின்னணி.... காலமெல்லாம் அடிமையாகவே இருக்கனுமா ?

3 months ago 22
திருத்தணியில் இருந்து மின்சார ரெயிலில் பயணித்து சென்னை மாநில கல்லூரியில் படிக்க வந்த முதலாம் ஆண்டு மாணவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாணவர்கள் கல்லூரிக்குள் போராட்டத்தில் குதித்ததால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. “காலமெல்லாம் அடிமையாகவே இருக்கனுமா”..? என்று சென்னை மாநில கல்லூரி மாணவர் சுந்தர், கொலைக்கு நீதி கேட்டு அவரது சகோதரி பேசிய ஆதங்க வார்த்தைகள் தான் இவை..! திருத்தணியில் இருந்து சென்னைக்கு வரும் ரெயில்களில் பயணித்து மாநில கல்லூரியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் பச்சையப்பன் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் படிப்பதற்கு வருவதால் அவர்கள் மாநில கல்லூரி மாணவர்களை அடிமையாக நடத்துவது தொடர்கதையாகி வருவதாக கூற்கின்றது. அந்தவகையில் மாநில கல்லூரியில் முதலாம் ஆண்டு பொலிடிக்கல் சயின்ஸ் படித்து வந்த திருத்தணி பொன்பாடி கிராமத்தை சேர்ந்த மாணவர் சுந்தர் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் கெத்துக்காட்ட கல்லூரி அடையாள அட்டையுடன் சில ரீல்ஸ் செய்ததாக கூறப்படுகின்றது அந்த ரீல்ஸ்களில் சுந்தர் செய்த சேட்டைகளை கண்டு காண்டான பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் அவரை சென்னை சென்டிரல் புற நகர் ரெயில் நிலையத்தில் இருந்து துரத்தி வந்து பெரியமேடு பகுதியில் சுற்றிவளைத்து காலால் மிதித்து தாக்கி உள்ளனர். இதில் பலத்தகாயம் அடைந்த சுந்தருக்கு, கடந்த 6 நாட்களாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. புதன் கிழமை காலை சுந்தர் சிகிச்சைபலனின்றி பரிதாபமாக பலியானார் . இந்த தாக்குதல் தொடர்பாக கைதான 5 மாணவர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாநில கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அசம்பாவிதங்களை தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர் கல்லூரிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையிலும் கலைந்து செல்ல மறுத்த மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் ராமன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அதை தொடர்ந்து மாணவர்கள் அஞ்சலி செலுத்த புறப்பட்டு சென்றனர் “தங்களை தாங்களே ரூட்டு தல என அழைத்துக்கொள்ளும் சில தறுதலை மாணவர்கள் தனிக்குழுவாக வலம் வந்து மற்ற மாணவர்களுக்கும், ரெயில் பயணிகளுக்கும் தொல்லை கொடுப்பதாக சுட்டி காட்டும் ரெயில்வே போலீசார், வருங்காலங்களில் குழு மோதலை தடுக்கும் வகைகளில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
Read Entire Article