ரூ.896 கோடியில் தாமிரபரணி புதிய கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் விரைவில் தொடக்கம்: அமைச்சர் கே.என்.நேரு

1 day ago 2

ஆலங்குளம் தொகுதியில் உள்ள கடையம் உள்ளிட்ட 163 கிராமங்கள் மற்றும் கீழப்பாவூர் பேரூராட்சி ஆகியவற்றுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அரசு முன்வருமா என்று ஆலங்குளம் எம்.எல்.ஏ. பால் மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: "இந்த திட்டத்தில் கிராமங்களுக்கு 40 லிட்டர், பேரூராட்சிகளுக்கு 100 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய ஒப்பந்ததாரர் இந்த பாராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே முழுமையாக ஆராய்ந்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தாமிபரபணி ஆற்றை நீர் ஆதரமாக கொண்டு ரூ.896 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது". இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read Entire Article