
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லிங்குசாமி. இவர் கடைசியாக ராம் பொதினேனியின் 'தி வாரியர்' படத்தை இயக்கி இருந்தார். இப்படம் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், இவரது அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி,லிங்குசாமி அடுத்ததாக ரூ.700 கோடி பட்ஜெட்டில் புராண திரைப்படம் உருவாக்க இருப்பதாக கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
'மகாபாரதத்தை வைத்து அபிமன்யு, அர்ஜுனன் என இரண்டு பாக கதையம்சம் கொண்ட படத்தினை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ. 700 கோடி பட்ஜெட். சீக்கிரம் அதற்கான அறிவிப்பு வெளிவரும்' என்றார்.