ரூ.6.50 கோடி மதிப்பில் 245 பள்ளிகளில் சிசிடிவி கேமரா : மேயர் பிரியா தகவல்

4 hours ago 2

சென்னை: சென்னை மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர் ஒருவர் பேசுகையில், மாநகராட்சிக்கு உட்பட்ட தொடக்க பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாமல் உள்ளது, என தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா பேசுகையில், ‘‘மாநகராட்சி கல்வித்துறை சார்பில் 206 தொடக்க பள்ளிகள், 130 நடுநிலை பள்ளிகள், 46 உயர்நிலை பள்ளிகள், 35 மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் செயல்படுகின்றன.முதல் கட்டமாக ரூ.6.50 கோடியில் 245 பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த ஏற்கனவே டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து ஆரம்ப, தொடக்க பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்று கூறினார்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றி வரும் தற்காலிக கணினி உதவியாளர்களின் தின ஊதியத்தை அதிகரிக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக தற்காலிக கணினி உதவியாளர்கள் பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 2024 முதல் 2025 வரை 11 மாதங்களுக்கு தினக்கூலி அடிப்படையில் நாள் ஒன்றுக்கு ரூ.577 வீதம் 26 நாட்களுக்கு ரூ.17,602 என 167 தற்காலிக கணினி உதவியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். தற்போது கணினி உதவியாளர்களுக்கு தினக்கூலி உயர்த்தப்பட்டு நாள் ஒன்றுக்கு ரூ.802ஆக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு 2025ம் ஆண்டு ஜூன் முதல் 2026ம் ஆண்டு மே மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான செலவின தொகை ரூ.47,990 கல்வி செலவினங்கள் என்ற தலைப்பில் மாநகராட்சி சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.

The post ரூ.6.50 கோடி மதிப்பில் 245 பள்ளிகளில் சிசிடிவி கேமரா : மேயர் பிரியா தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article