ஈரோடு,
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான ஈரோடு ராமலிங்கம் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக சோதனை நடத்தி வந்தனர்.
சென்னை, ஈரோடு, பெங்களூரு உள்பட ராமலிங்கம் தொடர்புடைய 26 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வந்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் பேரில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ராமலிங்கத்திற்கு தொடர்பான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.500 கோடி வரி ஏய்ப்பு செய்ததுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், சோதனையில் ரொக்கமாக ரூ.10 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதேபோன்று முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த 7-ம் தேதி தொடங்கிய வருமான வரித்துறை சோதனை 5 நாட்களுக்கு பின் நேற்றிரவு நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.