ரூ.4,000 லஞ்சம் வாங்கிய மின் வணிக உதவியாளர் கைது: லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடவடிக்கை

1 month ago 5

ஸ்ரீபெரும்புதூர்: சோமங்கலம் அருகே வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.4000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக உதவியாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே நல்லூர், கோல்டன் நகரை சேர்ந்தவர் மனோகரன். இவர், புதிதாக வீடு கட்டியுள்ளார். அவரது வீட்டின் முதல் தளத்திற்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமென சோமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த மாதம் விண்ணப்பம் செய்துள்ளார். அலுவலகத்தில் பணியிலிருந்த, வணிக உதவியாளர் ஆண்ட்ரூஸ், வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்க ரூ.4,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதற்கு, மனோகரன் தருவதாக தெரிவித்துள்ளார்.

பின்னர், லஞ்சம் கொடுக்க விரும்பாத மனோகரன், இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், நேற்று மனோகரன் வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்க வந்த ஆண்ட்ரூஸ், மனோகரனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் 4000 லஞ்சம் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார், அவரை கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரூ.4,000 லஞ்சம் வாங்கிய மின் வணிக உதவியாளர் கைது: லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article