ரூ.346 கோடியில் பெரம்பலூர் நகராட்சி, தொழிற் பூங்காக்களுக்கு குடிநீர் திட்டம் - செயல்படுத்த முதல்வர் உத்தரவு

3 weeks ago 4

சென்னை: கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகராட்சி, சிப்காட் எறையூர் மற்றும் பாடலூர் தொழிற்பூங்காவுக்கு ரூ.345.78 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று (அக்.25) வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகராட்சி, சிப்காட் எறையூர் மற்றும் பாடலூர் தொழிற்பூங்காவுக்கு , ரூ.366 கோடியில் 65 ஆயிரம் மக்கள் பயனடையும் வகையில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டம், பெரம்பலூர் நகராட்சிக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் என்ற அளவில் தினசரி 12.34 மில்லியன் லிட்டர் மற்றும் சிப்காட் எறையூர் 1.65 மில்லியன் லிட்டர் மற்றும், பாடலூருக்கு 2.20 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Read Entire Article