ரூ.3.20 கோடிக்கு கொப்பரை ஏலம்

4 months ago 28

 

ஈரோடு, செப். 30: பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நேற்று முன் தினம் கொப்பரை விற்பனை நடைபெற்றது. ஏலத்துக்கு மொத்தம் 5,773 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் முதல் தரக் கொப்பரைகள் 2,555 மூட்டைகள் வரப் பெற்றிருந்தன. இவை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.117.97க்கும், அதிகபட்சமாக ரூ. 135.59க்கும் விற்பனையாகின.

இரண்டாம் தரக் கொப்பரைகள் 3,218 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ.44.45க்கும், அதிகபட்சமாக ரூ.125.79க்கும் விற்பனையாகின. மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின. இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.3 கோடியே 20 லட்சம் ஆகும் என விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

The post ரூ.3.20 கோடிக்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Read Entire Article