ரூ.3,000 கட்டணம் செலுத்தி ஆண்டு முழுவதும் பயணிக்க புதிய திட்டம்: ஜி.கே.வாசன் வரவேற்பு

2 weeks ago 4

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ரூ.3,000 கட்டணம் செலுத்தி ஆண்டு முழுவதும் பயணிக்க புதிய திட்டத்தை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்

பொது மக்களின் சாலைப்போக்குவரத்துக்கு பெரிதும் பயன் தரும் இத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியதற்காக பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்நாடு முழுவதற்குமான மத்திய அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்கு பேருதவியாக அமைகிறது.

கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக மத்திய பா.ஜ.க அரசு பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் விவசாயம், குடிநீர், கழிப்பிட வசதி, வீடு, கடன் வசதி, சாலைப்போக்குவரத்து உள்ளிட்ட பலவற்றிற்கு நல்ல பல திட்டங்களை கொடுத்து நாட்டு மக்கள் பயன் பெறுவதை நாம் அறிவோம். அந்த வகையில் இப்போது மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்கள் சாலைப்போக்குவரத்தில் சுங்கக்கட்டணம் தொடர்பாக பாஸ்டாக் முறையில் புதிய திட்டத்தை அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்த 'ஃபாஸ்டாக்' முறையில் ரூ. 3,000 கட்டணம் செலுத்தி ஆண்டு முழுவதும் பயணிக்கலாம் என்ற புதிய அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மூவாயிரம் ரூபாய் விலையில், 60 கிலோ மீட்டர் வரம்பிற்குள் 200 பயணங்களை மேற்கொள்ளும் வகையில் பாஸ்டாக் வருடாந்திர பாஸை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 15, 2025 முதல் வழங்கப்படவுள்ள இந்த பாஸ் மூலம் வருடத்திற்கு 200 பயணங்கள் வரை மேற்கொள்ள முடியும். ரூ.3,000க்கு ஒரு முறை FASTag ரீசார்ஜ் செய்தால், தனியார் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில விரைவுச் சாலைகளில் ஒரு வருடத்திற்கு கூடுதல் சுங்கக் கட்டணங்கள் இல்லாமல் பயணிக்க முடியும். இந்த புதிய திட்டமானது சாலைப்போக்குவரத்தில் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற வணிக ரீதியான தனியார் வாகனத்தைப் பயன்படுத்துவோர் தேவைக்கு ஏற்ப பயணத்தை மேற்கொள்ள, குறைவான கட்டணத்தில் ஆண்டு முழுவதும் பயணம் செய்ய, சுங்கச்சாவடிகளில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க பயனுள்ளதாக இருக்கும்.என தெரிவித்துள்ளார் . 

Read Entire Article