ரூ.2000 கோடி நிலங்களை கையகப்படுத்தியும் விமான நிலைய விரிவாக்கத்தை கிடப்பில் போட்ட ஒன்றிய அரசு: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

2 weeks ago 3

சூலூர்: கோவை மாவட்டம், சூலூர் தாலுகா வாரப்பட்டி ஊராட்சியில் 370 ஏக்கர் பரப்பில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்க கூடிய தொழிற்சாலைகள் அடங்கிய ராணுவத் தொழில் பூங்கா அமைய உள்ளது. இதற்கான இடத்தை தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை வாரப்பட்டி ஊராட்சியில் அமைய உள்ள இந்த தொழில் பூங்கா தொழில்துறையில் மிகப் பெரிய வளர்ச்சியை உருவாக்கும்.

தொழில் பூங்காவிற்கான நீர் ஆதாரங்களை திருப்பூர் மாவட்டத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பெறப்பட உள்ளது. தொழிற்சாலைகள் அமைக்க இங்குள்ள நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தை தாமாக முன் வந்து வழங்கினால் அரசு மதிப்பீட்டின்படி அதிகபட்ச விலை அவர்களுக்கு வழங்கப்படும். கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து 2,000 கோடி ரூபாய் நில உரிமையாளர்களுக்கு கொடுத்து அவர்களது நிலங்களை கையகப்படுத்தி ஒன்றிய அரசிடம் ஒப்படைத்துள்ளோம். இருந்தும் இதற்கான பணிகளை மேற்கொள்ளாமல் ஒன்றிய அரசு கிடப்பில் போட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

The post ரூ.2000 கோடி நிலங்களை கையகப்படுத்தியும் விமான நிலைய விரிவாக்கத்தை கிடப்பில் போட்ட ஒன்றிய அரசு: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article