ரூ.182 கோடி நிதி ஒதுக்கீடு விவகாரம் இந்திய தேர்தல்களில் அமெரிக்க நிதியா? மாஜி தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்

2 months ago 10

புதுடெல்லி: அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் செயல்படும் அரசு செயல் திறன் துறை பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இதன்படி இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி ரத்து செய்யப்பட்டுள்ளதாக டிஓடிஜி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், எஸ்ஒய்.குரேஷி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், ‘நான் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது, ​​இந்திய தேர்தல் ஆணையம், இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக ஒரு அமெரிக்க நிறுவனத்தின் சில மில்லியன் டாலர் நிதியுதவியை பெறுவதற்கு ஏற்ப ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்களின் ஒரு பிரிவில் வெளியான செய்தியில் சிறிதும் உண்மை இல்லை.

நான் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது, ​​2012ல் ஐஎப்இஎஸ் உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்தது. அதேபோல் இந்திய தேர்தல் ஆணையத்தின் பயிற்சி மற்றும் வள மையத்தின் மூலம் விருப்பமுள்ள நாடுகளுக்கு பயிற்சி அளிக்க பல நிறுவனங்கள் மற்றும் தேர்தல் மேலாண்மை அமைப்புகளுடன் நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தோம்.

ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிதியுதவி அல்லது நிதி அளிப்பதாக வாக்குறுதி என எதுவும் இல்லை. உண்மையில், இருபுறமும் எந்தவொரு நிதி மற்றும் சட்டப்பூர்வ கடமையும் இருக்காது என்பதை புரிந்துணர்வு ஒப்பந்தம் தெளிவுபடுத்தியது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் தொடர்புடைய எந்தவொரு நிதியையும் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது மற்றும் தீங்கிழைக்கும் செயல்’ என்று தெரிவித்துள்ளார்.

The post ரூ.182 கோடி நிதி ஒதுக்கீடு விவகாரம் இந்திய தேர்தல்களில் அமெரிக்க நிதியா? மாஜி தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article