ரூ.16 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை வியாபாரிகள் மகிழ்ச்சி ஒடுகத்தூர் வாரச்சந்தையில்

1 day ago 2

 

ஒடுகத்தூர், மே 10: ஒடுகத்தூர் வாரச்சந்தையில் நேற்று ரூ.16 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை நடந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடந்து வருகிறது. அதன்படி, நேற்று காலை 6 மணிக்கு ஆட்டுசந்தை தொடங்கியது. காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்து சந்தைப்படுத்தினர். தொடர்ந்து, ஆடுகளை வியாபாரிகள் விற்பனை செய்ய தொடங்கினர்.
சித்திரை மாதத்தில் பல கிராமங்களில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதனால் வியாபாரிகளும் ஆடுகளை விற்பனை செய்ய மும்முரமாக இருந்தனர். தொடர்ந்து ஆடுகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு ஜோடி ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்கப்பட்டது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், சித்திரை மாதம் என்பதால் பல கிராமங்களில் கெங்கையம்மன் திருவிழா, மாரியம்மன் திருவிழா போன்றவை நடத்தப்பட்டு வருவதால் ஏராளமான மக்கள் ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தவும், வியாபாரத்திற்காகவும் ஆடுகளை வாங்க சந்தைக்கு வருகின்றனர். கடந்த 5 வாரங்களாக சந்தையில் ஆடுகளின் வரத்து அதிகரித்து இருப்பதால் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது. இன்று (நேற்று) நடந்த சந்தையில் ஒட்டு மொத்தமாக ரூ.16 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை நடந்தது என்றனர்.

The post ரூ.16 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை வியாபாரிகள் மகிழ்ச்சி ஒடுகத்தூர் வாரச்சந்தையில் appeared first on Dinakaran.

Read Entire Article