மதுரை: மதுரை ஆவின் பொது மேலாளர் சிவகாமி கூறுகையில், ‘‘மதுரை ஆவின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 2024 தீபாவளியை முன்னிட்டு ரூ.7 கோடிக்கு பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு தமிழகத்தில் அதிக அளவில் பால் உபபொருட்கள் விற்பனை செய்ததில் மதுரை ஒன்றியமானது முதலிடத்தைப் பெற்றுள்ளது.தினசரி பால் உற்பத்தி உயர்ந்ததன் காரணமாகவும் அதன் அடிப்படையில் தினசரி பால் விற்பனை மற்றும் பால் உபபொருட்கள் விற்பனையும் உயர்ந்ததாலும் மதுரை ஆவின் நிறுவனத்தின் நிதிநிலைமை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.
கடந்த (ஏப்ரல்-24 முதல் டிசம்பர்-24) வரையான 9 மாதத்தில் ரூ.14.4 கோடி லாபம் ஈட்டியுள்ளது. பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்கள் வழங்கும் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.1 ஊக்கத்தொகை (ஜன.25 முதல் பிப்.25) வழங்கப்பட்டு வருகிறது. பால் உற்பத்தி மற்றும் ஆவின் வளர்ச்சிக்கு எங்களுடன் இணைந்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்ததால் தான் மதுரை ஆவின் விற்பனையில் சாதனை படைத்துள்ளது’’ என்றார்.
The post ரூ.14.4 கோடி லாபம் ஈட்டி மதுரை ஆவின் முதலிடம் appeared first on Dinakaran.