ரூ.10 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் - 2 பேர் கைது

6 months ago 22

திபு,

அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் தில்லை டினிஅலி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் நேற்று முன்தினம் மாலை ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தில் பண்டல்கள் இருந்தன. இதையடுத்து அந்த வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அதில் பண்டல்களில் தடைசெய்யப்பட்ட மெத்தபெட்டமின் என்ற போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து 25 பண்டல்களில் இருந்த 50 ஆயிரம் மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த போதை மாத்திரைகளை கடத்தி வந்ததாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

Read Entire Article