கோவை, பிப். 18: தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக அலுவலக டெப்போக்கள் சீரமைப்பின்றி கிடப்பதாக புகார் வந்தது. இவற்றை சீரமைக்க அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. மாநில அளவில் அனைத்து கோட்டங்களிலும் உள்ள 100 டெப்போ அலுவலங்கள் சீரமைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
கோவை கோட்டத்தில் 1.36 கோடி ரூபாய் செலவிலும், சென்னை கோட்டத்தில் 1.01 கோடி ரூபாய் செலவிலும், சேலம் கோட்டத்தில் 1.01 கோடி ரூபாய் செலவிலும், கும்ப கோணம் கோட்டத்தில் 1.92 கோடி ரூபாய் செலவிலும் பணிகள் செய்ய உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. அலுவலக கட்டடம் சுத்தமாக இருக்க வேண்டும். தரை தளத்தில் டைல்ஸ் அமைக்க வேண்டும். கழிவறை, வாஷ்பேசின், கதவு, ஜன்னல் போன்றவற்றை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டிருக்கிறது.
The post ரூ.10 கோடியில் போக்குவரத்து அலுவலகங்கள் சீரமைப்பு appeared first on Dinakaran.