ரூ.10 ஆயிரத்துக்கு குழந்தை விற்பனை

2 months ago 17

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே பெருங்குடி முனியப்ப நகரை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியம். இவரது மனைவி ஜோதி (42). இவர்களது மகன் ராஜேஷ் (23). மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ராமசுப்பிரமணியம் குடும்பத்தினரை பிரிந்து சென்றார். சமையல் வேலைக்கு சென்று வந்த ஜோதிக்கு சிலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கர்ப்பமான ஜோதி, கடந்த மே மாதம் பெண் குழந்தை பெற்றெடுத்தார். இதை மகன் ராஜேஷ் கண்டித்துள்ளார்.

இதனால் ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சேர்ந்த வீரப்பன் (எ) லிங்கம் மனைவி அபிநயாவிற்கு ரூ.10 ஆயிரத்திற்கு குழந்தையை ஜோதி விற்றார். இருப்பினும் குழந்தையை அவ்வப்போது சென்று பார்த்துள்ளார். இதற்கு வாங்கியவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி விவரம் தெரிந்து பெருங்குடி விஏஓ அழகேசன் புகாரின் பேரில் ஜோதி, அவரது மகன் ராஜேஷ், குழந்தையை வாங்கிய அபிநயா ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். குழந்தையை மீட்டு மதுரையில் உள்ள தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

The post ரூ.10 ஆயிரத்துக்கு குழந்தை விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article