ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த கடத்தல்காரர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து பாலிவுட் நடிகர் உபியில் கடத்தல்

2 months ago 9

பிஜ்னோர்: உபி மாநிலம் மீரட்டில் நடந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக, பாலிவுட் நடிகர் முஷ்டாக் கான் கடந்த மாதம் 20ம் தேதி டெல்லி விமான நிலையத்தில் இருந்து மீரட் நோக்கி காரில் புறப்பட்டு சென்றார். ஆனால் அந்த கார் டெல்லியின் புறநகர்ப் பகுதிக்கு திருப்பி விடப்பட்டது. பின்னர் குறிப்பிட்ட இடத்தில் கார் நிறுத்தப்பட்டது. திடீரென அங்கு வந்த கடத்தல் கும்பல், முஷ்டாக் கானிடம் ரூ. 1 கோடி கொடுத்தால் விட்டுவிடுகிறோம் என்று கூறியது.

அதிர்ச்சியடைந்த அவர், தன்னால் ரூ. 1 கோடியை கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். பின்னர் அவரை உபி மாநிலம் பிஜ்னோர், சாஷீரி பகுதியில் உள்ள வீட்டில் வைத்துள்ளனர். அப்போது அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் பணம் கடத்தல் கும்பலில் இருந்த ஒருவனின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது. அன்றிரவு முழுவதும் கடத்தல் கும்பலின் பிடியில் இருந்த முஷ்டாக் கான், அதிகாலையில் மசூதியில் ஒலித்த சத்தத்தைக் கேட்டு விழித்தார்.

கடத்தல் கும்பலின் பிடியில் இருந்து எப்படியோ தப்பி வெளியே வந்தார். 21ம் தேதி மும்பை வந்து சேர்ந்தார். இதுகுறித்து முஷ்டாக் கானின் உதவியாளர் சிவம் யாதவ், பிஜ்னோர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவம் யாதவ் கூறுகையில், ‘‘ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருமாறு நாடகமாடி முஷ்டாக்கானை கும்பல் கடத்தியுள்ளது. அந்த கும்பலை பிடிக்க போலீசார் விசாரிக்கின்றனர்.

The post ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த கடத்தல்காரர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து பாலிவுட் நடிகர் உபியில் கடத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article