ரூ.1.65 கோடியில் வளர்ச்சிப்பணிகள்

5 hours ago 1

 

 

சேந்தமங்கலம், மே 10: எருமப்பட்டி ஒன்றியம் சிவநாயக்கன்பட்டி, அலங்காநத்தம், புதுக்கோட்டை , பொட்டிரெட்டிபட்டி ஆகிய ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ள ரூ.1.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார அட்மா குழு தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜ், தனம் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பொன்னுசாமி எம்எல்ஏ கலந்துகொண்டு இரு ஊராட்சிகளிலும் சிமெண்ட் சாலை, கதிரடிக்கும் களம், அங்கன்வாடி மைய கட்டிடம் தடுப்பு சுவர் கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட பணிகளை தொடங்கி வைத்து அப்பகுதி பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் விமலா சிவக்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் விமல், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் பெரியசாமி, துளசிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ரூ.1.65 கோடியில் வளர்ச்சிப்பணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article