ரூ. 1.60 கோடி பணத்தை டெபாசிட் செய்யாமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

2 months ago 9

சென்னை: Fuel technologies நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ரூ. 1.60 கோடி பணத்தை டெபாசிட் செய்யாமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட 3 பட இந்தி டப்பிங் உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் ரூ.6 கோடிக்கு Fueltechnologies வாங்கியிருந்தது. 2 படங்கள் தயாரிக்காததால் ரூ.5 கோடியை நிறுவனத்துக்கு திருப்பி தந்த நிலையில், மீதம் உள்ள ரூ.1.6 கோடி தரவில்லை. உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்யவும் ஆணையிட்டுள்ளது.

The post ரூ. 1.60 கோடி பணத்தை டெபாசிட் செய்யாமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Read Entire Article