ரிஷப் பன்ட்டின் பெருந்தன்மை

1 day ago 3

லக்னோ: ஐபிஎல்லில் ஆர்சிபி-லக்னோ நேற்று மோதிய கடைசி லீக் போட்டியில் ஆர்சிபி வெற்றிபெற்றது. ஆர்சிபி பேட்டிங்கின் போது முக்கியமான பரபரப்பான கட்டத்தில் 17 வது ஓவரை லக்னோ வீரர் திக்வேஷ் ரதி வீசியிருந்தார். பெங்களூரு சார்பில் ஜித்தேஷ் சர்மாவும் மயங்க் அகர்வாலும் நன்றாக ஆடிக் கொண்டிருந்தனர். திக்வேஷ் ரதி வீசிய இந்த ஓவரின் கடைசிப் பந்தில் மயங்க் அகர்வால் ஸ்ட்ரைக்கில் இருந்தார். திக்வேஷ் ஓடி வந்து பந்தை வீசுவதற்குள் நான் ஸ்ட்ரைக்கராக இருந்த ஜித்தேஷ் க்ரீஸை விட்டு வெளியே வந்தார். இதை கவனித்த திக்வேஷ் பெய்ல்ஸை தட்டி விட்டு ரன் அவுட்டுக்கு அப்பீல் செய்வார்.

கள நடுவரும் மூன்றாவது நடுவரிடம் அது அவுட்டா, நாட் அவுட்டா என கேட்க ஆரம்பித்து விடுவார். ரீப்ளேயில் அது அவுட் என்றே தெரிந்தது. ஆனால் லக்னோ கேப்டன் ரிஷப் பன்ட் கொஞ்சம் பெரிய மனது காட்டினார். அதாவது கள நடுவரிடம் சென்று நாங்கள் அப்பீல் செய்யவில்லை, அவுட் கொடுக்காதீர்கள் எனக் கூறிவிடுவார். அதனால்தான் நாட் அவுட் கொடுக்கப்படும். ரிஷப் பண்ட்டின் இந்த செயலுக்கு ஜித்தேஷ் அவரை கட்டித்தழுவி நன்றி கூறியிருந்தார். நான் ஸ்ட்ரைக்கர் ரன் அவுட் முறை விதிகளுக்கு உட்பட்டதுதான் என்பதால் திக்வேஷ் செய்ததிலும் எந்தத் தவறும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post ரிஷப் பன்ட்டின் பெருந்தன்மை appeared first on Dinakaran.

Read Entire Article