ரிஷப் பன்டுக்கு வாழ்த்து சொன்ன நடிகை: சமூக ஊடகங்களில் ரசிகர்கள் விவாதம்

7 months ago 28

மும்பை: இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான தொடர் தொடங்கியுள்ள நிலையில், ரிஷப் பன்டை வாழ்த்தும் வகையில் ‘ஆல் தி பெஸ்ட்’ என்று கூறியுள்ள நடிகை ஊர்வசி ரவுடேலா குறித்து ஊடகங்களில் விவாதம் நடக்கிறது.  பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலாவும், இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பன்டும் காதலித்து வருவதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. ரிஷப் பன்ட் குறித்து அடிக்கடி ஊர்வசி ரவுடேலா கருத்துகளை கூறிவருவதால், இருவருக்கும் இடையிலான உறவு குறித்து பலரும் பேசி வருகின்றனர்.

இவ்விசயத்தில் ரிஷப் பன்ட் தரப்பில் எவ்வித ரியாக்‌ஷனும் இல்லை. தற்போது இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான தொடர் தொடங்கியுள்ள நிலையில், ரிஷப் பன்ட் வாழ்த்தும் வகையில் ‘ஆல் தி பெஸ்ட்’ என்று கூறியுள்ளார். அதேநேரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்த மற்றொரு பேட்டியில் ஊர்வசி ரவுடேலா கூறுகையில், ‘ஆர்பி-யையும் (ரிஷப் பன்ட்) என்னையும் இணைத்து வெளியாகும் செய்திகள் யாவும் வதந்திகள்; இதுகுறித்து வெளியாகும் மீம்ஸ்கள் ஆதாரமற்றவை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

எனது தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட முறையில் வைத்திருக்க விரும்புகிறேன். எனது முழு கவனமும் எனது சினிமா தொழில் மற்றும் நான் ஆர்வமாக உள்ள வேலையில் ஈடுபட்டுள்ளேன்’ என்றார். முன்னதாக கடந்த 2022ம் ஆண்டில் அவர் அளித்த பேட்டியில், ‘ஆர்பி-யை மணிக்கணக்கில் காத்திருக்க செய்தேன்’ என்றார். ஆனால் ரிஷப் பன்ட், மற்றொரு பெண்ணான இஷா நேகி என்பவருடன் நீண்ட காலமாக டேட்டிங்கில் இருந்து வருவதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது.

The post ரிஷப் பன்டுக்கு வாழ்த்து சொன்ன நடிகை: சமூக ஊடகங்களில் ரசிகர்கள் விவாதம் appeared first on Dinakaran.

Read Entire Article