
கோவை ,
ரிதன்யா தற்கொலை வழக்கு விசாரணை தொய்வாக நடப்பதாகக் கூறி, அவரது தந்தை அண்ணாதுரை, கோவை ஐ.ஜி. அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாதுரை கூறியதாவது:- இந்த வழக்கில் சரியான செக்சன் போட்டு வழக்கை தீவிரமாக விசாரணை செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு கொடுத்துள்ளேன். எவ்வளவு சீக்கிரமாக செய்ய முடியுமோ செய்கிறேன் என போலீசார் கூறியுள்ளனர்.
உடற் கூராய்வு முடிவுகள், ஆய்வுக்கூட அறிக்கை, ஆடியோ ரிப்போர்ட் வரவில்லை.இதனால் காலதாமதம் ஆகும். அறிக்கைகள் வந்தவுடன் சம்பந்தப்பட்ட மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வழக்கு தொய்வாக போகிறது. விசாரணை அதிகாரி மீது சந்தேகம் வருகிறது. தனி விசாரணை அதிகாரி வேண்டும். சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வேண்டுகோளும் வைத்துள்ளோம்" என்றார் .