ரிச்சா கோஷ் பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது - ஸ்மிருதி மந்தனா

3 months ago 9

வதோதரா,

மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு பி.சி.சி.ஐ அறிமுகம் செய்தது. இந்த தொடரின் முதல் சீசனில் மும்பை அணியும், 2வது சீசனில் பெங்களூரு அணியும் கோப்பையை வென்றன. இந்த நிலையில் டபிள்யூ.பி.எல். தொடரின் 3வது சீசன் நேற்று தொடங்கியது.

நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் பெங்களூரு வெற்றி பெற ரிச்சா கோஷின் அதிரடி ஆட்டம் மிக முக்கிய காரணமாக அமைந்தது. அவர் 27 பந்தில் 64 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக அவருக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இப்போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். ரிச்சா கோஷ் மற்றும் எல்லிஸ் பெர்ரி பேட்டிங் செய்த விதம், பார்க்க அற்புதமாக இருந்தது. அவர்களை இவ்வாறு விளையாடியதை பார்க்க அருமையாக இருந்தது.

ஏனெனில், அவர்கள் வலை பயிற்சியில் அதைத்தான் பயிற்சி செய்து வந்தனர். இப்போட்டியில் நாங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இப்போட்டியின் முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு இங்கு பனியின் தாக்கும் இருக்கும் என்பதால், பந்து வீசுவது கடினம் என்பதை உணர்ந்தோம். இதன் காரணமாக இப்போட்டியில் நாங்கள் நீடிக்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும்.

இத்தொடருக்கு முன் நாங்கள் சிறந்த வீராங்கனைகளை ஏலத்தில் எடுத்திருக்கிறோம். மேலும் இப்போட்டியில் காயமடைந்த வீராங்கனைகளுக்கு பதிலாக இடம்பிடித்த வீராங்கனைகள் சிறப்பாக விளையாடியுள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article