ராம் சரண் இல்லை...'கேம் சேஞ்சர்' படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா?

4 months ago 13

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார்.

அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் ராம் சரண் நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் பொங்கல் வெளியீடாக வரும் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்க்கு இக்கதை பிடித்திருந்ததாகவும், ஆனால், ஷங்கர் ஒன்றரை வருட கால்ஷீட் கேட்டதால் அவர் விலகியதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, ஷங்கர் இயக்கிய 'நண்பன்' படத்தில் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article