ராமேஸ்வரத்தில் மீனவர்களுக்கு கடல்வளம் பாதுகாப்பு பயிற்சி

1 day ago 4

ராமேஸ்வரம், மே 14: கடல் குப்பைகள் தடுப்பு மற்றும் கடல் வளம் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மீனவ கிராம மக்களுக்கு இரண்டு நாள் பயிற்சி பட்டறை ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் இயங்கி வரும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், மீனவ கிராம மக்களுக்கு பயிற்சி பட்டறை நடைபெற்றது. அந்நிறுவனத்தின் இயக்குநர் வேல்விழி கடல் சுற்றுச்சூழலில் வீணாக தூக்கி எறியப்பட்ட வலைகளினால் ஏற்படும் தாக்கம் குறித்தும், அதனை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து உரையாற்றினார்.

மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானி சரவணன், கடல் சுற்றுச்சூழல் அமைப்பில் கடல் குப்பைகளால் ஏற்படும் தீங்கான தாக்கம் மற்றும் பல்வேறு வகையான கடல் குப்பைகளால் கடல்வாழ் உயிரினங்கள் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என விளக்கினார். நிகழ்ச்சியில் ராமேஸ்வரம் மீன்வளத்துறை ஆய்வாளர் கார்த்திக் ராஜா, ராமேஸ்வரம் விசைப்படகு சங்க தலைவர் போஸ் உள்ளிட்டோர் உரையாற்றினர். இந்த கருத்தரங்கில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் போது விஷத்தன்மை உள்ள ஜெல்லி மீன்கள் கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி முறைகள் குறித்தும், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் ஜெல்லி சேஃப் என்ற முதலுதவி பெட்டகங்களும் மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த இரண்டு நாள் இப்பயிற்சி பட்டறையில் ராமேஸ்வரத்தில் உள்ள சம்பை, மாங்காடு, வடகாடு, ராமகிருஷ்ணபுரம், நடராஜபுரம் கிராமங்களை சேர்ந்த மீனவர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ராமேஸ்வரத்தில் மீனவர்களுக்கு கடல்வளம் பாதுகாப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article