'ராமாயணம்': ராவணனாக நடிக்க யாஷ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

15 hours ago 1

சென்னை,

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் யாஷ். இந்த படங்கள் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது.

அதை தொடர்ந்து யாஷ் தற்போது 'டாக்ஸிக்' மற்றும் ராமாயணம் படங்களில் நடித்து வருகிறார். இதில் ராமாயணம் படத்தில் ராவணனாக யாஷ் நடிக்கிறார். மேலும், ராமராக ரன்பீர் கபூரும் , சீதையாக சாய்பல்லவியும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், வில்லனாக நடிக்கும் யாஷ் இப்படத்திற்காக ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்காக இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகராக யாஷ் இருப்பார்.

Read Entire Article