ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு வார விழா நிகழ்ச்சிகள்

6 months ago 21

ராமநாதபுரம், நவ. 16: ராமநாதபுரம் மாவட்டத்தில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று முன்தினம் முதல் துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி இன்று 16.11.2024ல் பட்டிணம்காத்தான் ராம் காலணியில் கால்நடை சிகிச்சை முகாமும், நாளை 17.11.2024ல் ராம்கோ பண்டக சாலை மூலம் விற்பனை மேளா நிகழ்ச்சியும் 18.11.2024ல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ரத்த தானம் முகாமும், 19.11.2024ல் மாவட்ட அளவிலான விழா பரக்கத் மஹாலில் பால்வளத்துறை மற்றும் கதர் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையிலும் நடைபெறவுள்ளது. 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் இறுதி நாளான 20.11.2024ல் அன்று மண்டல இணைப்பதிவாளர் தலைமையில் கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது.

The post ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு வார விழா நிகழ்ச்சிகள் appeared first on Dinakaran.

Read Entire Article