ராமநாதபுரம் காவல் உட்கோட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஒரே இடத்தில் இருந்து கண்காணிப்பதற்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் திறந்து வைத்தார்.
பின்னர் பேட்டி அளித்த அவர், ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து உடை மாற்றும் அறைகள் மற்றும் 120க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகளை சோதனை செய்ய இருப்பதாக கூறினார்.