ராமதாஸ் தலைமையில் 8ம் தேதி பாமக செயற்குழு கூட்டம்

3 hours ago 1

பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. நான் உயிருடன் இருக்கும்வரை அன்புமணிக்கு பாமக தலைவர் பதவி கொடுக்கமாட்டேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும், அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்துள்ளார்.

இதனிடையே, ராமதாஸ் தலைமையில் பாமக புதிய தலைமை நிர்வாகக்குழு ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்நிலையில், பாமக செயற்க்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் அருகே ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் 8ம் தேதி பாமக செயற்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article