ராம நவமி நன்னாள் வாழ்த்துகள்: அண்ணாமலை

20 hours ago 2

சென்னை,

ராமரின் அவதார தினம் இன்று (ராம நவமி) இந்தியா முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் புகழ்பெற்ற ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ராம நவமியை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; "பகவான் ஸ்ரீ ராமபிரான் அவதரித்த ஶ்ரீ ராம நவமி நன்னாளில், அனைவருக்கும் ராமபிரானின் அருளும் ஆசியும் குறைவின்றிக் கிடைக்கவும், அனைவரின் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும், வளமும் கிடைக்கவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Read Entire Article