'ராபின்ஹுட்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு - பவன் கல்யாண் ரசிகர்கள் அதிர்ச்சி

3 hours ago 2

சென்னை,

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தில் கிஸ்ஸிக் என்ற சிறப்பு பாடலுக்கு நடனமாடியிருந்த ஸ்ரீலீலா தற்போது, ராபின்ஹுட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நிதின் கதாநாயகனாக நடித்த இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கிறார்.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இப்படத்தில் ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக ராபின்ஹுட் திட்டமிட்டபடி அன்று வெளியாகாது என்று படக்குழு தெரிவித்தது. அதோடு, புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில், ராபின்ஹுட் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் மார்ச் 28-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதே நாளில்தான் பவன் கல்யாண் நடித்திருக்கும் ஹரிஹர வீரமல்லு படமும் வெளியாகிறது. இரு படங்களும் மோத இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

This summer, buckle up for the ADVENTUROUS ENTERTAINER that is going to erupt on the big screens #Robinhood IN CINEMAS WORLDWIDE ON MARCH 28th ❤@actor_nithiin @sreeleela14 @VenkyKudumula @gvprakash @MythriOfficial @SonyMusicSouth pic.twitter.com/cSqvZFTGFV

— Mythri Movie Makers (@MythriOfficial) January 18, 2025
Read Entire Article